யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். இந்தப் படத்திற்கு 'பெரியாண்டவர்' என பெயரிடப்படுள்ளது.
'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை', 'இவன் தந்திரன்', 'பூமராங்', 'தள்ளிப் போகாதே' போன்ற பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு 'பெரியாண்டவர்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. டைம் டிராவலர் படமாகவும், வித்தியாசமான கதை அமைப்பிலும் இந்தப் படம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகியாக முன்னணி நாயகியை நடிக்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
யோகிபாபு சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சென்னை ஈஸிஆரில் ரூ.50 லட்சம் செலவில் சிவன் கோவில் போல செட் அமைக்கப்பட உள்ளது. வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதி வசனகர்த்தாவாக பணியாற்ற உள்ளார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago