சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் 3 நாட்களில் 47.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'டான்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் கடந்த 13-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
அப்பா - மகன் சென்டிமென்ட், மாணவன் - ஆசிரியர் இடையேயான உறவு என இருவேறு கதைகள் கொண்ட இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், 'டான்' படம் வெளியாகி 3 நாட்களில் உலக அளவில் 47.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் படம் வெளியான முதல் நாள் 9.47 கோடி ரூபாயையும், இரண்டாவது நாள் ரூ.10.63 கோடி, மூன்றாவது நாள் ரூ10.87 கோடி வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இது இரண்டாவது பிளாக்பஸ்டர் படம். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'டாக்டர்' தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
» ‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ - ட்விட்டரில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ‘பீஸ்ட்’ இறுதிக் காட்சி
» 'குடி பழக்கத்தில் அவர் ஒரு அரக்கன்' - ஜானி டெப் மீது ஆம்பர் ஹேர்ட் குற்றச்சாட்டு
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago