'நீலம் புரோடக்ஷன்ஸ்' சார்பில் பா.ரஞ்சித் தயாரித்த 'சேத்துமான்' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் 'சேத்துமான்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியிருந்தார். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்த இந்த படத்திற்கு பிந்து மாலினி இசையமைத்திருந்தார். கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இப்படம் அமைந்தது.
அண்மையில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வாயிருந்தது. அதேபோல தமிழ்நாட்டில் நடந்த 19-வது சென்னை திரைப்பட விழாவில் இப்படம் இரண்டாவது விருதைப்பெற்றது. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்த படம் வருகின்ற 27-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
» வித்தியாசமான லுக்கில் நடிகர் சந்தானம் - கவனம் ஈர்க்கும் 'குலு குலு' பர்ஸ்ட் லுக்
» ''வாழ்க்கை ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்'' - புதுவீடு குறித்து அனிதா சம்பத் நெகிழ்ச்சி
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago