லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் 'விக்ரம்' படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் (Cameo) தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து, கிட்டத்தட்ட 8 மாதங்களில் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத்தின் இசையில், இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கமல்ஹாசனைப்பொறுத்தவரை அவர் கடைசியாக 2018-ம் ஆண்டு விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அரசியலுக்கு திரும்பியவர், படம் நடிக்கவேயில்லை. 4 ஆண்டுகள் கழித்து தற்போது அவரது நடிப்பை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று மாலை 7 மணிக்கு கமல் குரலில், அனிருத் இசையில் 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, 'விக்ரம்' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளதாக கூறப்படுகிறது. மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யாக கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago