இதுதான் நான் 26: ராஜுவோட ஸ்டைல் தனியா தெரியும்

By பிரபுதேவா

ஸ்பெயின்ல நடந்த 'சிவாஜி' படத்தோட நாலாவது நாள் பாட்டு ஷூட்டிங்ல ரஜினி சாரும், ஸ்ரேயாவும் ஆடிட்டிருந்தாங்க. அந்த இடத்துல படிக்கட்டுங்க நிறைய இருந்துச்சு. ரஜினி சாருக்கு பின்னாடி நின்னுக்கிட்டிருந்தவங்களை பார்த்து, ''முதல்ல டிசிப்ளீனா இருக்கக் கத்துக் கோங்க. உங்களை இங்கே அனுப்பி னாரே. உங்க பாஸ், அவர் எனக்கு தெரிஞ்சவர்தான்''ன்னு பயங்கரமா திட்டி னேன். அதுக்கு பிறகுதான் அவங்க அமைதியாகி டான்ஸ்ல மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சாங்க.

பிரேக் டைம்ல, ''நானும் அவங் களை மூணு, நாலு நாளா கவனிச்சுக் கிட்டுத்தான் இருந்தேன். உங்க கோபம் கரெக்ட்தான். இதே மாதிரிதான் முந்தி எல்லாம் நானும் கோபப்படுவேன்”ன்னு ரஜினி சார் சொன்னார். சமீபத்துல 'அவெஞ்சர்' படம் பார்த்தேன். அதுல ஒரு இடத்துல, 'யூ நாட் ஆங்க்ரி? 'ன்னு ஒருத்தன் கேப்பான். அதுக்கு 'ஐ ஆம் ஆல்வேஸ் ஆங்க்ரி' ன்னு ஹீரோ சொல்வான். அதேமாதிரி, 'தில்லானா மோகனம்பாள்' படத்துல ''எல்லாம் ஓ.கே. இந்த கோபம்தான்!''ன்னு சிவாஜி சார்கிட்ட மனோரமா கேட்பாங்க. அதுக்கு அவர், 'குறையில்லாத மனுஷன் யாரு ஜில்லு? 'ன்னு சொல்வார். இதெல் லாம் எனக்கு ரொம்பவே பிடிச்ச வசனம்.

வேலை பார்க்கும்போது உள்ளே ஒரு நெருப்பு இருந்துக்கிட்டே இருக் கும். இருக்கணும். ஒரு பாட்டு பண் ணும்போதோ, ஒரு படம் இயக்கும் போதோ நான் வேறொரு உலகத்துல இருப்பேன். அதுவும் பகல் 12 மணிக்கு தார் ரோட்டுல நிக்கும்போது தகதகன்னு கொதிக்குமே அந்தமாதிரி. மத்த நேரத்துல பார்க்குற பிரபுதேவா வேற.. அந்த இடத்துல இருக்குற பிரபுதேவா வேற. ஷூட்டிங் ஸ்பாட்ல 200 சதவீத உழைப்பை கொடுக்குறோம். அது சரியா அமையணுமே... அதுக்காகத்தான்.

ஒவ்வொரு டான்ஸ் மாஸ்டருக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கு. எங்க வீட்டுல நாங்க எல்லாருமே ஒவ்வொரு ஸ்டைல்ல பண்ணுவோம். அதுல ராஜு வோட ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். ராஜுன்னு சொல்லும்போது இங்கே அவனைப் பத்தி சொல்லணும்னு தோணுது. அவன் டிகிரி படிச்சுட்டுத்தான் முழுசா டான்ஸுக்குள்ள வந்தான். நான் அப்பாகூட எப்படி வந்தேனோ, அந்தமாதிரிதான் அவனையும் அவர் அப்பப்போ கூப்பிட்டுப்பார்.

'இதயம்' படத்துக்கு அப்பாதான் மாஸ்டர். நாங்க ரெண்டு பேருமே அந்தப் படத்துல வேலை பார்த்தோம். 'ஓ... பார்ட்டி நல்ல பார்ட்டிதான்' பாட்டு அவன் பண்ணினதுதான். அதே படத்துல வர்ற 'ஏப்ரல் மேயில' பாட்டுல என்னோட ஐடியா இருக்கும். அந்த ரெண்டு பாட்டோட ஸ்டெப்லயும் அவ்ளோ வித்தியாசம் இருக்கும்.

அதுக்கு பிறகு 'திருடா திருடா' படத்துலயும் அப்பாகூட அண்ணன் ராஜு இருந்தான். அந்த படத்துல அவனோட ஸ்டைல் நிறைய இடத்துல இருக்கும். ராஜு ஆரம்பத்துல இருந்தே அப்பாகிட்ட பயங்கரமா திட்டு வாங் கிட்டே இருப்பான். இந்த படத்துல வேலை பார்க்குறப்பதான் அவன் ஸ்டைல் பிடிச்சுபோய், 'இவன் நல்லா பண்றான்' னு அப்பா ஏத்துக்க ஆரம்பிச்சார். மத்த யார் சொன்னாலும் அது பெருசு இல்லை. அப்பா 'ஓ.கே'ன்னு சொன்னது அவனோட திறமைக்கு கிடைச்ச பரிசு. யாரோட பாதிப்பும் இல்லாமல் அவன் ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினான். அது ரசிகர்களுக்கு பிடிச்சதோட மட்டுமில்லாம பல டைரக்டர்ஸ், ஹீரோ, ஹீரோயின்களுக்கும் புடிக்கும். அதுதான் அவனோட ஸ்பெஷல்.

விஜய் ஆடும்போதெல்லாம் எனக்கு ராஜுவோட ஞாபகம்தான் வரும். அவரோட ஆரம்ப நாட்கள்ல பல படங்களுக்கு ராஜுதான் மாஸ்டர். இப்பவும் விஜய் படங்கள் பண் ணிக்கிட்டிருக்கான். அவரோட மூவ் மெண்ட்ஸ் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ராஜுவை பார்க்குற மாதிரியே இருக்கும்.

ஒருமுறை சல்மான் சார் படம். லண்டன்ல ஷூட்டிங். நிறைய கூட்டம் கூடிச்சு. சார்கிட்ட போய், ''எனக்கு வெட்கமா இருக்கு. நீங்களே ஆடிடுங்க சார்!''ன்னு சொல்லியிருக்கான். ''ஹலோ... நீங்கதான மாஸ்டர்!''னு சல்மான்கான் கேட்டிருக்கிறார். ''பரவா யில்லை சார். உங்களுக்கு தோணுறதை ஆடுங்க!''ன்னு திரும்பவும் சொல்லி யிருக்கான். இப்படி ஜாலியா பேசி வேலை பார்க்குற டைரக்டர், கேமராமேன், ஹீரோ, ஹீரோயின்கிட்ட ஈஸீயாக பிரண்ட்ஸ் ஆகிடுவான். அப்படி ஒரு டைப். நான் அப்படி இல்லை. வேற டைப்.

ஒரு படத்தோட டைரக்டரோ, தயா ரிப்பாளரோ, கம்போஸ் ஆகி வரும் பாட்டை கொடுத்து, ''எப்படி இருக்கு? ''ன்னு கேட்கும்போது, நல்லா இருந்தா, “சூப்பரா இருக்கு சார்” ன்னு சொல்வான். அப்படி இல் லைன்னா கொஞ்சம்கூட யோசிக்காம, ''நல்லா இல்லை சார்!''னு ஓப்பனா சொல்லிடுவான். இதுதான் ராஜுவோட கேரக்டர்னு எல்லோருக்குமே தெரி யும். அதை யாரும் தப்பா எடுத் துக்க மாட்டாங்க. அப்படி நினைக்காததாலதான் 25 வருஷமா அவனால பெஸ்ட்டா டிராவல் பண்ண முடியுது.

நான் ரிகர்சல்ல பிக்ஸ் பண்ற ஸ்டெப்ல இருந்து 90 சதவீதம் மாத்திக்க மாட்டேன்னு சொன்னேன்ல. ஆனா, அவன் அப்படி இல்லை. ஸ்பாட்டுக்கு ஏத்த மாதிரி மாத்திப்பான். சின்ன ரூம்லதான் இந்தப் பாட்டுன்னு சொன்னாக்கூட, ''ஓ.கே.. கேமராமேன் யாரு?''ன்னு கேட்டுட்டு அந்த இடத்துல ஷூட் பண்றதுக்கான வேலைக்குள்ள போய்டுவான்.

ராஜுவும், நானும் தினமும் பேசிக்கிறதெல்லாம் இல்லை. நான் ஹைதராபாத்ல இருக்கும்போது அவனும் அங்க இருப்பான். மும்பைல ஷூட்டிங்ல இருக்கும்போது அவனும், அவனோட வேலையா இருப்பான். ஆனா, அதெல்லாம் எங்க ரெண்டு பேருக்குமே தெரியாது. யாராவது வந்து சொல்லுவாங்க. அண்ணன், தம்பிங்கிறதால எப்பவும் பேசிக்கிட்டு இருக்க மாட்டோம். அப்படி தோணினதும் இல்லை. அதேமாதிரி எங்களோட ஒரு பாட்டு ஹிட்டுன்னா நாங்க அதைப்பத்தி பெருசா பேசிக்கிட்டதும் இல்லை.

என்கிட்ட இருந்த அஸிஸ்டென்ட்ஸ் மாஸ்டரா ஆனதைவிட அவன்கிட்ட இருந்து வந்தவங்கதான் இன்னைக்கு ஃபீல்டுல அதிகம். அவங்க எல்லார் கிட்டயும் ராஜுவோட ஸ்டைல் இருக்கும். அவனோட மூவ்மெண்ட்ஸ் எப்பவுமே கேஷுவலா ஸ்டைலிஷா இருக்கும். ஒரு பாட்டு அவன் பண்ணும்போது ஷூட்ல அது தெரியாது. அதேபாட்டு முழுசா தயாரானதும் அவ்ளோ ஸ்டைலிஷா தெரியும். அதனாலதான் ராஜு இன்னைக்கு இந்தியாவுல ஒன் ஆஃப் தி பெஸ்ட் மாஸ்டரா இருக்கான். அதை நினைக்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.

இப்போ ரெண்டு நாட்களுக்கு முன் ஹைதராபாத்ல நானும், எமி ஜாக்‌சனும் சேர்ந்து ஆடுற பாட்டோட ஷூட்டிங் போச்சு. அதுல ஒரு மூவ்மெண்ட்ல ராஜுவும் ஆடியிருப்பான். அதுல கூட அவனோட ஸ்டைல் தனியா தெரியும்.

இப்படியெல்லாம் கலக்கிட்டிருக்குற ராஜுவை, அவன் மாஸ்டரா வொர்க் பண்ற படங்களோட ஹீரோயின்ஸ் மட்டும் என்ன சொல்லுவாங்கன்னா...

- இன்னும் சொல்வேன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்