"தன்னை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என பிரதமர் மோடி நினைத்துக் கொள்ள வேண்டும்" என்று இயக்குநர் பாக்யராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை. ஆனால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடி ஜி-க்கு நான் ஒரு ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். உங்களைத் தவறாக விமர்சனம் செய்பவர்களுக்கு வாயும் சரியாக இயங்கவில்லை.. காதும் சரியாக கேட்கவில்லை” என்று கூறினார்.
மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருந்தார். அதனை ஒட்டி சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டது. பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது பாக்யராஜ் இந்தக் கருத்தை கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago