பீஸ்ட் படத்துக்கு எதிராக பேசி அதை ப்ரமோட் செய்ய மாட்டேன் - ஹெச்.ராஜா

By செய்திப்பிரிவு

'பீஸ்ட்' திரைப்படத்திற்கு எதிராக பேசி அதை ப்ரமோட் செய்ய விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பகத் ஃபாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், விநாயகன் உட்பட பலர் நடித்த மலையாள படம், ’டிரான்ஸ்’. இந்தப்படத்தை பிரபல இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்ஸன் விஜயன், சுஷின் ஷியாம் இசை அமைத்துள்ளனர்.

இந்தப் படம் தமிழில் 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா , இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு நிலை மறந்தவன் படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.

அப்போதுபேசிய ஹெச்.ராஜா ''பீஸ்ட் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. பீஸ்ட் திரைப்படத்திற்கு நான் பிரமோஷன் செய்ய விரும்பவில்லை. நிலையற்றவன் திரைப்படம் கிறிஸ்த்துவ மதத்திற்கு எதிரானது அல்ல. மத வியாபாரிகளை வெளிச்சம் போட்டு காண்பிப்பதே படத்தின் நோக்கம். மேலும் மதத்தை வைத்து வியாபாரம் செய்பவர்களை இந்த திரைப்படத்தில் சுட்டிக் காண்பித்து உள்ளனர்.

அயோத்தியா மண்டபம் விவகாரத்தை இதனுடன் சேர்த்து பேச வேண்டாம். காரணம் அங்கே எந்த மத வியாபாரமும் நடக்கவில்லை. ஜெய்பீம் திரைப்படத்தில் எப்படி காலண்டர் ஒரு குறியீடாக இருந்ததோ, அதே போல் நிலைமறந்தவன் திரைப்படத்தில் சூர்யா ஜோதிகா என்கிற பெயர்களும் ஒரு குறியீடுதான்’ '' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்