பகத் ஃபாசில் நடித்து மலையாளத்தில் வெளியான 'டிரான்ஸ்' படம், தமிழில் 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் வெளியாகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பபட்டுள்ளது.
பகத் ஃபாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், விநாயகன் உட்பட பலர் நடித்த மலையாள படம், ’டிரான்ஸ்’. இந்தப்படத்தை பிரபல இயக்குநர் அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார். மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தி அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல்.
படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே அந்த கும்பலின் மோசடிக்குத் துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும் போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளது.
» 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு நிறைவு - ஜூனில் வெளியாக வாய்ப்பு
» 19 வயதே ஆன 'கேஜிஎஃப்2' படத்தின் எடிட்டர் - யார் இந்த உஜ்வால் குல்கர்னி?
இந்தப் படத்துக்கு அமல் நீரத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்ஸன் விஜயன், சுஷின் ஷியாம் இசை அமைத்துள்ளனர். இந்தப் படம் தமிழில் ‘நிலை மறந்தவன்’என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago