''நான் நானாக இருக்க விரும்புகிறேன்; உங்கள் கருத்தை ஏன் திணிக்கிறீர்கள்?'' - நிறத்தை விமர்சித்தவர்களுக்கு பிரியாமணி பதில்

By செய்திப்பிரிவு

''நான் நானாக இருக்க விரும்புகிறேன், உங்கள் கருத்தை ஏன் மற்றவர்கள் மீது திணிக்கிறீர்கள்?'' என்று தனது நிறம், உடல் பருமன் குறித்தும் விமர்சித்தவர்களுக்கு நடிகை பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தனது நிறம், உடல் பருமன் தொடர்பான விமர்சனங்களுக்கு நடிகை பிரியாமணி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஜூம் எண்டர்டெயிண்ட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''நான் கருப்பாக இருக்கிறேன்; குண்டாகி விட்டேன் என சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகிறார்கள். நீங்கள் ஒரு ஸ்பாட்லைட்டில் இருக்கும்போது, உங்கள் எடை கூடினாலும், அதீத எடை குறைந்தாலும் பொதுமக்களால் கவனிக்கப்படுவீர்கள். பிரபலமானவராக இருந்தால் இது ஒரு பகுதியாக நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. சமூகவலைதளங்களில் என் நிறத்தைப்பற்றி பேசுகிறார்கள்.

99% பேர் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை விரும்புகிறார்கள். ஆனால் இந்த ஒரு சதவீதம் பேர்தான் நான் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்று விமர்சிக்கின்றனர். இந்தத் தொழிலில், நீங்கள் எல்லா நேரத்திலும் முதன்மையானதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. உங்கள் உடல், தோல், முடி மற்றும் நகங்களை நீங்கள் பராமரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்வது கடினமானக உள்ளது. ஒரேயொரு நாள், நான் நானாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு பிடித்ததை சாப்பிட விரும்புகிறேன். நான் அழகாக இருக்க விரும்பவில்லை.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எண்ணம். நீங்கள் ஏதாவது நேர்மறையானதாகச் சொல்ல விரும்பினால், அதைச் சொல்லுங்கள். அப்படியில்லை என்றால் உங்கள் கருத்துகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தை ஏன் மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிக்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, ''உங்கள் ரசிகர்கள் மற்றும் ஃபலோவர்ஸ்களுக்கு நீங்கள் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை. என்னப்பற்றி அவர்கள் உருவாக்கும் சில மீம்ஸ்களை நான் ரசிக்கிறேன். அதை ஷேர் செய்து மகிழ்கிறேன். ஆனால் சில நேரங்களில் சில கருத்துகள் ஜீரணிக்க முடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கும். இதுபோன்ற ட்ரோல்களை நான் உடனடியாக ப்ளாக் செய்துவிடுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்