நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன இணையும் புதிய படத்திற்கு கேப்டன் மில்லர் என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், 'நானே வருவேன்' படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ். இதைத் தொடர்ந்து தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை 'தோழி ப்ரேமா', 'ரங் தே' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமிழில் 'வாத்தி' என்றும், தெலுங்கில் 'சார்' என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் 'ராக்கி' 'சாணிகாயிதம்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‛கேப்டன் மில்லர்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படம் 1930ல் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் படத்தில் தனுஷூக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாகவும் சொல்லபடுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago