இதுதான் நான் 23: முதல் அனுபவம்!

By பிரபுதேவா

ரிகர்சல்ல நான் கம்போஸ் பண்ணின ஸ்டெப்பை ஷூட்டிங்ல ஏன் மாத்து றாங்கன்னு யோசிச்சிட்டே நின் னேன். இதை அப்பாகிட்ட கேட்க பயம். அங்கே இருந்த டான்ஸர்ஸ்கிட்ட, ‘‘அந்த ஸ்டெப்ஸ் நல்லாதானே இருந் துச்சு’’ன்னு கேட்டேன். அவங்க சாதா ரணமா, ‘‘ஆமாம்.. நல்லா இருந்துச்சு. ஆனா, அது ஆர்ட்டிஸ்டுக்கு வர ணுமே?’’ன்னு சொன்னாங்க. ‘‘ஆர்ட் டிஸ்ட்குத்தான் மூவ்மென்ட் வருதே’’ன்னு அடுத்துக் கேட்டா, ‘‘அவங்க டிரெஸ்ஸுக்கு ஏத்த மூவ்மென்ட்டா இருக்கணுமே?’’ன்னு சொன்னாங்க. ஒண்ணுமே புரியலை. இப்படியெல்லாம் கூடவா மாற்றம் இருக்கும்னு தோணுச்சு.

அதுவும் ஒண்ணு, ரெண்டு மாற்றம் இல்லை. லொக்கேஷன், ஹீரோ, ஹீரோயின் டிரெஸ்ஸிங், ட்ரீம் பாட்டு, ரியல் பாட்டு, கேமராமேன் லைட்டிங் இப்படி பல விஷயங்களால மாற்றம் நடக்குது. இதுக்கெல்லாம் நாம எப்பவும் தயாரா இருக்கணும்னு அப்போதான் எனக்கு புரிஞ்சுது. இருந்தாலும் ரிகர்சல்ல போட்ட பெஸ்ட் மூவ்மென்ட்ஸ்லாம் ஸ்பாட்ல மாறுறப்ப மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு.

அதனால்தான் இப்போ வரைக்கும் என்னோட பாட்டுல நான் ரிகர்சல்ல ஃபிக்ஸ் பண்ற ஸ்டெப்பை மாத்தவே மாட்டேன். அது அப்படியே 90 சதவீதம் ஷூட்டிங்ல இருக்கும். ஒரு பாட்டுக்கு 200 சதவீத உழைப்பை கொடுக்குறோம். ஏன் மாத்தணும்? யாரா இருந்தாலும் மாத்த மாட்டேன். அதனாலதான் சில பேரு ‘டாஸ்க் மாஸ்டர் பிரபு’ன்னு கொஞ்சம் கோபப்படவும் செய்வாங்க. ஆனா, ஷூட்டிங்குக்கு ரெண்டு நாளைக்கு முன்பே அந்தப் பாட்டுக்கு ஆடப் போற ஹீரோ, ஹீரோயினோட நடை, உடை, பாவனையை ஷார்ப்பா நோட் பண்ணிடுவேன்.

அப்படி கம்போஸ் பண்ணியதாலதான் ‘மாப்பிள்ளை’ படத் துல ரஜினி சார், தெலுங்குல சிரஞ்சீவி சார், நாகார்ஜுனா சார் இப்படி எல்லோ ரையும் அன்னைக்கு புது ஸ்டைல் மூவ்மென்ட்ஸோட ஆட வைக்க முடிஞ் சுது. அவங்கள்ல பலரும், ‘‘பிரபு... ஷூட்டிங்ல பயங்கரமா பென்ட் எடுத் திட்டீங்க. ஆடுறப்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, ஸ்கிரீன்ல பார்க் குறப்ப சூப்பரா வந்திருக்கு’’ன்னு சொல் வாங்க. ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்னு பல பேருக்கு இதனாலயே என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு!

டான்ஸ் அசிஸ்டென்டா இருக்குறப்ப நிறைய அனுபவம் கிடைக்கும். ‘வெற்றி விழா’ன்னு ஒரு படம். அந்த டைம்ல அப்பாவுக்கு அசிஸ்டென்டா நானும், அண்ணன் ராஜுவும் இருந்தோம். ஷூட்டிங் ஸ்பாட்ல அப்பா இல்லாதப்ப… ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் கம்போஸிங் வேலைகளைக் கவனிக் கிறது வழக்கம். அதுவும் அசிஸ் டென்டோட வேலை. அதை பார்த்த கமல் சார், ‘‘உங்க பையன் பிரபு நல்லா ஆடுறான். லண்டனுக்கு டிரெயினிங் அனுப்புங்க. பெரிய ஆளா வரு வான்’’ன்னு அப்பாவிடம் சொன்னார். அப்பாவுக்கும் அந்த நம்பிக்கை உள்ளுக்குள்ளே இருந்துச்சு. ஆனா, நான் லண்டனுக்கு போகலை… என்னவோ இங்கேயே இருந்துட்டேன்.

‘வெற்றிவிழா’ படத்தில் வர்ற ‘வானம் என்ன கீழிருக்கு’ பாட்டுக்கு கமல் சார், பிரபு சார் ரெண்டு பேரும் சேர்ந்து நடனம் ஆடணும். கமல் சாருக்கு நான் அசிஸ்டென்ட். பிரபு சாருக்கு அண்ணன் ராஜு அசிஸ்டென்ட். ஷூட்டிங்ல கமல் சார், ‘‘நான் ஆடணுமா?’’ன்னு கலாட்டாவா கேட்டார். ‘கஷ்டப்பட்டு பயங்கரமா ரிகர்சல்லாம் முடிச்சுட்டு வந்த பிறகு இப்படி இவர் கேட் கிறாரே’ன்னு நினைச்சேன். அடுத்து கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் பாட்டுக்குத் தயாரானாங்க. நல்ல பாட்டு. சிம்பிள் சிம்பிள் ஸ்டெப். அதெல்லாம் இன்னமும் அப்படியே ஞாபகத்துல இருக்கு. கமல் சார் பெரிய நடிகர். நான் சின்னப் பையன். டான்ஸ் ஆட ஆரம்பிச்சோம். 1… 2… 3 ன்னு ஸ்டார்ட் பண்ணிட்டு 4 சொல்றப்ப, ஒரு பக்க காலை மேல் பக்கம் தூக்கி ஆடணும்.

அவர் மெதுவாகத்தான் தூக்கினார். ஆனா, நான் எந்த அளவுக்கு காலை உயர்த்தினேனோ, அதை அவர் ரொம்ப சாதாரணமா செஞ்சார். அட, இதை ஈஸியா செஞ்சுட்டாரேன்னு அடுத்து, இன்னும் ஹைட்டா உயர்த்தினேன். கமல் சாரோ, அதைவிட இன்னும் ஹைட்டா மேலே தூக்கினார். என்ன இது? நாம ரொம்ப கஷ்டப்பட்டு செய்ற வேலையை இவர் சாதாரணமா செஞ்சுட்டு அடுத் தடுத்து போய்ட்டே இருக்காரேன்னு ஆச்சர்யத்தோட நின்னேன். அதுதான் கமல் சார். கமல் ஈஸ் கமல்!

அந்தப் பாட்டுக்கு பிரபு சாரும் ரொம்ப கியூட்டா ஆடியிருப்பார். சின்ன சின்ன முவ்மெண்ட்ஸ்கூட நல்லா வந்திருக்கும். என்னோட ஸ்டைல், அண்ணன் ராஜுவோட ஸ்டைல், அப்பாவோட ஸ்டைல்னு அந்தப் பாட்டுல எங்க மூணு பேரோட ஸ்டைலும் இருக்கும்.

அந்த டைம்ல எல்லா ஸ்டுடியோவு லேயும் நிறைய ஷூட்டிங் நடக்கும். ரஜினி, கமல், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்த்தன், மம்முட்டி, மோகன்லால்னு அத்தனை பெரிய ஹீரோக்களும் ஒரே இடத்துல பக்கம்பக்கம் ஷூட்டிங்ல இருப்பாங்க. மத்தியான நேரத்துல எல்லாரும் ஒண்ணா சாப்பிடவும் செய்வாங்க. பார்க்கவே பிரமிப்பா இருக்கும்.

அன்னைக்கு அப்படித்தான் கமல் சாரோட ‘வெற்றிவிழா’ படமும், ரஜினி சாரோட ‘பணக்காரன்’ படமும் பக்கத்து பக்கத்துல ஷூட்டிங் நடந்தது. ரெண்டு படங்களுக்கும் அப்பாதான் மாஸ்டர். ‘வெற்றிவிழா’ படத்துல வர்ற ‘தத்தோம் ததாங்கு தத்தோம்’ பாட்டோட ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிச்சோம். கமல், டிஸ்கோ சாந்தி காம்போ பாட்டு அது. செட்ல வந்து அப்பா ஒரு லுக் விட்டுட்டு ரஜினியோட ‘பணக்காரன்’ ஷூட்டிங்குக்கு புறப் பட்டார். ‘அப்பாஜி?’ன்னு திரும்பிப் பார்த்தேன். ‘‘நீதாண்டா… இந்தப் பாட்டை ஃபுல்லா பண்ணப் போறே’’ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். எனக்கு மனசுக்குள்ள டக்குன்னு ஆச்சு. அப்பா இப்படி தனியா விட்டுட்டு போறா ரேன்னு ஒரு மாதிரி இருந்துச்சு. படத்துக்கு பிரதாப் போத்தன் சார்தான் டைரக்டர். அவருக்கு என்மேல நல்ல அபிப்ராயம் இருந்துச்சு. என் டான்ஸை பார்க்குறப்பல்லாம், ‘‘கலக்குறப்பா பிரபு. குட்.. குட்’’னு தட்டிக் கொடுத்துட்டே இருப்பார்.

முதன்முதலா ‘வெற்றிவிழா’ங்கிற பேர்ல, அதுவும் கமல் சாருக்கு மாஸ் டரா ஒரு முழு பாட்டையும் தனியா பண்ணப் போறேன். ‘‘பிரபு பயப்படாதே. பாட்டு நல்லா இருந்தா உன் பேரை போடுறோம். நல்லா இல்லன்னா உங்க அப்பா பேரை போட்டுடுறோம். கவலைப்படாம ஜாலியா பண்ணு’’ன்னு சொன்னாங்க.

அது ‘சிவாஜி புரொடக்‌ஷன்’ படம். டெக்னீஷியன் வரைக்கும் நல்லா கவனிச்சி மரியாதை கொடுக்கிற கம்பெனி அது. மாஸ்டரா எனக்கு முதல் அனுபவம். ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரஷன்’ன்னு எடுத்துக்குற மாதிரி ஒரு டைம். என்னை சுத்தி இருந்த எல்லாருக்குமே என் மேல நம்பிக்கை இருந்தது. ஒருவழியா மூணு நாட்கள்ல அந்தப் பாட்டை முடிச்சேன். ‘வெற்றிவிழா’ படத்தை ‘தி பார்ன் அல்டிமேட்டம்’, ‘தி பார்ன் சுப்ரிமெஷி’ படங்கள் மாதிரி அப்பவே எடுத்துட்டாங்க. படம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அப்படி இருந்த அந்தப் படத்துல என்னோட பேரு வந்துச்சா?

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்