'பயமா இருக்கா... இதுக்கு அப்புறம் இன்னும் பயங்கரமாக இருக்கும்' - 'பீஸ்ட்' பட ட்ரெய்லர் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படம் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு சில தினங்கள் முன் அறிவித்தது. அதன்படி ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் அறிவிப்பு போஸ்டரிலேயே, விஜய் மாஸ்க் என வித்தியாசமாக தோன்றினார். அதேபோல் இதிலும் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார். ட்ரெய்லரில் முழுக்க விஜய் ஆக்‌ஷன் மோடிலேயே இருக்கிறார். இது இப்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. வெளியான பதினைந்து நிமிடங்களிலேயே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்