நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் 'நாளை' என்று மட்டும் பதிவிட்டு 'பீஸ்ட்' குறித்து சஸ்பென்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது ட்ரெய்லர் குறித்த அறிவிப்புதான் என்பதை அப்போதே ரசிகர்கள் சரியாக யூகித்தனர். அதன்படி தற்போது தயாரிப்பு நிறுவனம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வலைதள பக்கத்தில், "நம்ம ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்'' என்று பீடிகையுடன் ட்ரெய்லர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இப்போது வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பிலேயே பகிரப்பட்டுள்ள போஸ்டரில் கவனம் ஈர்க்கும் வகையில் விஜய்யின் தோற்றம் அமைந்துள்ளது.
» விஜய் 66 கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி?
» 'எனக்கும் அலோபீசியா பாதிப்பு இருந்தது' - அனுபவம் பகிர்ந்த சமீரா ரெட்டி
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago