"விஜய் சார் போன்ற ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரை இயக்கப்போவது நினைத்து பெருமையாக உள்ளது" என விஜய் 66 பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி தெரிவித்துள்ளார்.
'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் 'விஜய் 66' என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் நாயகி தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளன. கீர்த்தி சுரேஷ் முதல் கீர்த்தி சனோன் வரை பல பெயர்கள் முன்பு அடிபட்டன. லேட்டஸ்ட்டாக இந்த லிஸ்ட்டில் திஷா பதானி பெயரும் இணைந்துள்ளது.
தெலுங்கில் அறிமுகமாகி பாலிவுட்டில் இப்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் திஷா பதானி. தோனியின் பயோபிக் படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற திஷா சல்மான் கான் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இவர் தான் விஜய் 66 படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாக இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யுடன் ஏற்கெனவே நகைக்கடன் விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ள அனுபவம் திஷாவுக்கு உள்ளது. தமிழ் சில வருடங்கள் முன்பே சுந்தர் சியின் 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் திஷா. ஆனால், அந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தையை அதன்பிறகு இல்லாததால், டிராப் ஆனது. இதனிடையே, தான் விஜய்யின் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், தயாரிப்பு தரப்பு இதுதொடர்பாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனிடையே, இயக்குநர் வம்சி பைடிபள்ளி விஜய்யுடன் இணைந்து பணிபுரிவது தொடர்பாக பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் 'ஜேசிஎம்' படத்தை தயாரித்து வருகிறார் வம்சி பைடிபள்ளி. இந்தப் படத்தின் விழா ஒன்றில் பேசும்போது தான், "விஜய் தேவரகொண்டா உடன் பணியாற்றுவது ஒரு சகோதரர் உடன் பணியாற்றுவது போன்றது. அதே நேரத்தில் விஜய் சாருடன் பணிபுரிவது மிகப்பெரிய பாரம்பர்யம் கொண்ட ஒரு சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிவது போன்றது. இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரை இயக்கப்போகிறேன் என்பதை நினைக்கும்போது ஒருமாதிரி பெருமையாக உள்ளது" என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago