பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் எப்போது? - வைரலாகும் நெல்சனின் 'நாளை' ட்வீட் 

By செய்திப்பிரிவு

நாளை நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் எனப் பேச்சுகள் எழுந்துள்ளன.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்துள்ளன. 'பீஸ்ட்' படத்துடன் 'கேஜிஎஃப் 2' படமும் மோதவுள்ளது. இதனால், இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கியுள்ளன. இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ட்விட்டரில் ''நாளை'' என்று பதிவிட்டுள்ளார்.

இதனால், நாளை 'பீஸ்ட்' படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் அல்லது மூன்றாவது சிங்கிள் என மூன்றில் ஏதேனும் ஒன்று வெளியாகலாம் எனப் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்று நெல்சனுக்கு கோரிக்கைகள் வைக்கத் தொடங்கியுள்ளனர். கேஜிஎஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் இந்தக் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

முன்னதாக, விஜய் படம் என்றாலே பிரமாண்ட ஆடியோ லாஞ்ச் இருக்கும். 'பீஸ்ட்' படத்தின் ஆடியோ லாஞ்ச் இதுவரை நடைபெறவில்லை. ஆடியோ லாஞ்ச் நடக்க வாய்ப்பில்லை என்பதையும் படக்குழு வட்டாரங்கள் சில செய்திகளில் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளன. ஆடியோ லாஞ்ச்சுக்கு பதிலாக விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிப்பதால் சன் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் 'பீஸ்ட்' படக்குழுவுடன் நடிகர் விஜய்யும் நிகழ்ச்சி பங்கேற்று பேட்டி கொடுத்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும். படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப டிவி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்