‘ஜெனடில்மேன் 2’ படத்தின் கதயநாயகி மற்றும் இசையமைப்பாளர் குறித்து தயாரிப்பு தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து 1993-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. இப்படத்தில் மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். ஷங்கரின் முதல் படமான இதனை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஹ்மான் இசையில் பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கே.டி.குஞ்சுமோன் சமீபத்தில் வெளியிட்டதுடன், ‘பாகுபலி’ ‘நான் ஈ’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட விவரத்தை வெளியிட்டார். அதேநேரம், நயன்தாரா ‘ஜெனடில்மேன் 2’ நடிக்கவிருப்பதாக சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு இப்போது பதில் கொடுத்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நயன்தாரா சக்ரவர்த்தி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளம் மற்றும் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர். அவரை இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
» 'சுதந்திர வீர் சாவர்க்கர்' ஹீரோவாக ரன்தீப் ஹூடா - வெளியானது அதிகாரபூர்வ அப்டேட்
» 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த படம் - ரசிகர்களை ஈர்க்கும் அல்போன்ஸ் புத்திரனின் 'கோல்டு' டீஸர்
மேலும் விரைவில் இப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயன் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago