’வாடிவாசல்’ திரைப்படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றவுள்ளார் நடிகர் கருணாஸ்.
தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன். அதனைத் தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இதில் சூர்யா நாயகனாக நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி பேசும் படமாக எடுக்கப்படவுள்ளது.
இதனிடையே, 'வாடிவாசல்' படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைந்துள்ளார். அரசியலில் இருந்து விலகியிருக்கும் நிலையில், முழுநேரமாக சினிமாவில் மீண்டும் பணியாற்றத் தொடங்கியுள்ள கருணாஸ், அந்த வகையில் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றவுள்ளார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் கருணாஸ், "கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அடையாளத்தை கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.
» 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்: பிரதமர் மோடி
» ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வழக்கத்துக்கு மாறாக பதிவாகும் வாக்குகள்: நெறிப்படுத்தும் IMDb
பல திரைப்படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமை. ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago