'ரைட்டு, உண்மையை அப்புறம் சொல்றேன்' - விவாதமான கார்த்திக் நரேனின் பதிவு

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் 'மாறன்' படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

தனுஷ் - மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாறன்’. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடியில் நேற்று மாலை வெளியானது. படம் எதிர்பார்த்து போல் இல்லாததால் ரசிகர்கள் வலைதளங்கள் மூலமாக தங்களின் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன் சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரைட்டு, உண்மையை அப்புறம் சொல்றேன்' என்று பதிவிட்டிருந்தார். சில மணி நேரங்களில் இந்தப் பதிவை நீக்கினாலும் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

'மாறன்' படத்தின் சொதப்பலாக திரைக்கதையை தான் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதனை முன்வைத்து கார்த்திக் நரேன் இந்தப் பதிவை போட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஆரம்பத்தில், பாடலாசிரியர் விவேக் தான் படத்தின் திரைக்கதை எழுதும் பொறுப்பை ஏற்றிருந்தார். பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.

அதேபோல், படத்தின் டைட்டில் கார்டிலும் கதை இலாகா சத்யஜோதி பிலிம்ஸ் என்றே குறிப்பிட்டிருந்தது. கார்த்திக் நரேன் பெயரில் எழுத்து - இயக்கம் என்றே வந்தது. இதுபோன்ற சந்தேகங்களும், அவரின் பதிவுகளும் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்