எனது படங்களிலிருந்து விலகி வித்தியாசமானது ‘அநீதி’ - வசந்தபாலன் தகவல்

By செய்திப்பிரிவு

எனது படங்களிலிருந்து விலகி வித்தியாசமானது ‘அநீதி’ என்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ராதிகா சரத்குமார், அபர்ணநிதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயில்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ‘ஜெயில்’ வெளியாவதற்கு முன்பே தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை சென்னையில் துவங்கினார் வசந்தபாலன்.

இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘அநீதி’ எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது ‘அநீதி’ படம் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: “‘அநீதி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்தவண்ணம் உள்ளது. இசை அசுரன் ஜீவி பிரகாஷ் அவர்கள் மிக அற்புதமான நான்கு பாடல்களைத் தந்துள்ளார். ஒவ்வொன்றும் ஒரு வகை இசை ரகம். விரைவில் பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் துவங்க உள்ளன. என்னுடைய படங்களிலிருந்து விலகி ஒரு வித்தியாசமான வகையை ( different genre) சேர்ந்த படம் அநீதி. உங்களைப் பெரிதும் கவரும் என்று ஆழமாக நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்