’ஏகே61’ படத்துக்காக எடையைக் குறைக்கும் அஜித்? - வெளிவந்த புது தகவல்

By செய்திப்பிரிவு

‘ஏகே61’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையைக் குறைக்கத் தொடங்கியுள்ளார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வலிமை’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால், வசூல் ரீதியாக படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன.

இதனிடையே, அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இதனையும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.

தற்போது இந்தப் படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. மார்ச் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தில் அஜித்தின் கெட்டப் என்று புகைப்படம் ஒன்றைப் படக்குழு வெளியிட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சமீபத்தில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், "இப்படத்தில் நாயகன், வில்லன் இரண்டுமே அஜித் தான்" என்றார்.

இப்போது இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் குறித்து இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அது அவரின் எடைக் குறைப்பு குறித்தது. ஒரு கேரக்டருக்காக சுமார் 25 கிலோ அளவு எடையை குறைக்க அஜித் தற்போது பயிற்சி மேற்கொண்டுவருகிறாராம். இதற்காக பயிற்சியாளர்கள் உதவியுடன் கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வரும் அஜித் 10 கிலோ வரை தற்போது எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தில் அவரின் உடல் எடை மற்றும் தோற்றம் விமர்சிக்கப்பட்ட நிலையில், ஏகே61’ படத்தில் மெலிந்த தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்