ஜெயம் ரவி - ராஜேஷ் கூட்டணியில் நாயகியாக இணையும் கீர்த்தி சுரேஷ்?

By செய்திப்பிரிவு

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகிலன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் இறுதிக்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நடிப்பதற்கு பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வைத்துள்ளார். இதில் ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராஜேஷ் கதையில் ஜெயம் ரவி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி - ராஜேஷ் கூட்டணி படத்தினையும் ஸ்கிரீன் சீன் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்பிற்கான தேதிகள் முடிவானவுடன் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் ஜோடி இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. தனது முந்தைய படங்கள் போல, இந்தப் படத்தின் கதைகளமும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்