அரசியல் படம் என்பது குறித்த தகவலை ‘விஜய் 66’ இயக்குநர் வம்சி மறுத்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
‘பீஸ்ட்’ படத்துக்குப் பிறகு வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘விஜய் 66’ என அழைக்கப்படுகிறது. இந்தப் படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் இந்தப் படத்தின் கதைக்களம் அரசியல் பின்னணி என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இயக்குநர் வம்சி “இது அரசியல் பின்னணி கொண்ட கதைக்களம் அல்ல. எனது முந்தைய படங்கள் போன்று எமோஷனலான கதைக்களம்” என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
‘விஜய் 66’ படத்தின் தமிழ் வசனங்களை இயக்குநர் ராஜுமுருகன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
38 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago