‘கனா’ திரைப்படம் சீனாவிலும் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பாடலாசிரியர், பாடகர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழில் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கில் 'கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் அளவுக்கு தெலுங்கு ரீமேக் வரவேற்பைப் பெறவில்லை. இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது. ஆனால், யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில், சீனாவிலும் வெளியாகவுள்ளது ‘கனா’. சீன மொழியிலும் தங்களது படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர். அங்கு மார்ச் 18-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா என்றால் அதிகப்படியான திரையரங்குகள் வெளியாகும். ஆகையால், அங்கும் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago