'வலிமை' ஓர் அற்புதமான அனுபவம்: ஹியூமா குரோஷி

By செய்திப்பிரிவு

தனது திரை வாழ்வில் 'வலிமை' படம் ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது என்று ஹியூமா குரோஷி தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'வலிமை'. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பல்வேறு படங்களின் கலவை, படத்தின் நீளம் என பல்வேறு தவறுகளை சமூகவலைதளத்தில் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.

தமிழில் ரஜினி நடித்த 'காலா' படத்துக்குப் பிறகு, 'வலிமை' படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார் ஹியூமா குரோஷி. இதில் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார். அவருடைய காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு தொடர்பாக ஹியூமா குரோஷி கூறியது: "அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் என்னை வியப்படையச் செய்துள்ளது. இந்நேரத்தில் அஜித் குமார் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கதாபாத்திரத்தை, எனக்குப் பரிசளித்த அஜித் சார், போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நன்றி. ஒட்டுமொத்தமாக இது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது, மேலும், இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எனக்கு ஒரு முழுமையான ஒரு நல்ல அனுபவத்தை அளித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

தற்போது 'டபுள் எக்ஸ்எல்', 'மித்யா', 'மோனிகா', 'ஓ மை டார்லிங்' உள்ளிட்ட இந்திப் படம் மற்றும் வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் ஹியூமா குரோஷி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்