தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவரான இயக்குநர் வீணை எஸ்.பாலச்சந்தர் குறித்து இயக்குநர் மகேந்திரன் பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும்.
இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது:
"பெரிய மகாமேதை எஸ்.பி. அவர்கள் நினைவாஞ்சலி ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது எனக்குத் தெரியாது. சமீபத்தில் ஒரு வாரத்திற்கும் முன்னால் தி ப்ரைட் ஆப் தமிழ் சினிமா, தி ப்ரைட் ஆப் இந்தியன் சினிமா. மிஸ்டர் மணிரத்னம் இதுபோல விஷயத்தை சொல்லி என்னை அழைச்சாரு.
எஸ்.பி.சார் என் குரு
எனக்கு ரொம்ப சந்தோஷம். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது பெரிய விஷயமே இல்லை. அதுல நாம அவ்வளவு ஈடுபடவும் முடியாது. ஆத்மார்த்தம், ஒரு சில நிகழ்ச்சிகள் இதுபோலதான்.. ஒரு ஜீவனுள்ள ஒரு நிகழ்ச்சி... மிஸ்டர் மோகன்ராம், அப்புறம் எஸ்.பி.சாரோட சன் ராமன் அட்வகேட் எஸ்.பி.சாரோட எனக்கு எவ்வளவு பெரிய பக்தி இன்னைக்கு வரைக்கும் இருக்கு. ஹி வாஸ் மை குரு. ரொம்பப் பேருக்குத் தெரியாது.
நான் சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடியே இந்த சினிமாவைப் பிடிக்காம வெறுத்து வெளியேறினப்பவே... ஏன்னா நான் சினிமாவை விரும்பி வந்தவன் கிடையாது மத்தவங்க மாதிரி. இவங்கள்லாம் எவ்வளவு சாதனைகள் படைச்சவங்க. சினிமாவை லவ் பண்ணி வந்தவங்க. சினிமாவை வெறுத்தவன் நான். இழுத்து வந்துட்டாங்க. இவ்வளவுதான். டைரக்டர் ஆனதும் அப்படிதான். நான் சினிமா உலகத்துக்கு வெளியே இருந்தபோது, தமிழ் சினிமாக்களைப் பாத்து திருப்தி பட்டது கிடையாது. ரொம்ப குறைபட்டிருக்கேன் மனசுக்குள்ளே. ஆனாலும் ஒரே ஒரு டைரக்டரோட படங்கள் எஸ்.பி.சாரோட படங்களைப் பாக்கும்போது மட்டும் ஆச்சரியமா இருக்கும் அந்த மாணவப் பருவத்திலேயே, என்ன மாதிரி ஷாட்ஸ், எப்படி கன்சீவ் பண்றார். என்ன மாதிரி ஸ்கிரீன் ப்ளே..
ஆனா கடைசி காலத்துல அவரை யாருமே ஃபாலோ பண்றது கிடையாது. ஃபாலோ பண்ணவும் முடியாதுன்னு எனக்குத் தெரியும். அப்பேர்ப்பட்ட மனிதர்மேலே எனக்கு எப்பவுமே பெரிய மரியாதை உண்டு. என்னுடைய ஃபர்ஸ்ட் மீட்டிங் வித் இந்த மேதை எஸ்.பி.அவர்கள்.. அது என்னுடைய பெரிய பாக்கியம். லைஃப்ல எல்லாத்தையும் எனக்குக் கொடுத்தது கடவுள்தானே தவிர, என் மூளையில்லை. சத்தியம். எதிர்பாராத திருப்பங்கள்தான் என் வாழ்க்கையை அமைச்சது. அதை அமைச்சுக் கொடுத்தது ஆண்டவன்தான்.
எஸ்.பி.சாருடன் முதல் சந்திப்பு
நான் எஸ்.பி.சாரை பாக்கணுங்கறது ஒரு விதி இருந்தது வாழ்க்கையிலே. நான் அப்படித்தான் நினைக்கறேன். நான் அப்போ.. சினிமாவை விட்டு வேண்டாம்னு சொல்லிட்டு ஐ வாஸ் ஒர்க்கிங் இன் துக்ளக். அஸிஸ்டெண்ட் எடிட்டராக இருந்தேன். சோ சார் எடிட்டர் உங்களுக்கு எல்லாம் தெரியும். நான் எஸ்.பி.சார் மேலே நான் எவ்வளவு பக்தி வச்சிருக்கேன்ங்கறதும் சோ சாருக்குத் தெரியும். அப்போ துக்ளக்குல போஸ்ட் மார்ட்டம்னு ஒரு பகுதியில என்ற பேர்ல சினிமா விமர்சனம் எழுதுவோம். அதுல டியர் டாக்டர்னு அட்ரஸ் பண்ணி அந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதி கடைசில இப்படிக்கு டாக்டர் முடிச்சிடுவோம். நான்தான் எழுதுவேன். கடைசில அந்த விமர்சனத்தை எடுத்துகிட்டு கன்சர்ன் டைரக்டர்ட போய்ட்டு.... நாங்க ரிப்ளை வாங்குவோம். அவரும் டியர் டாக்டர் அப்படினு எழுதுவார்.
அப்படி ஒரு சமயம். ஒரு படம், 'நடுஇரவில்'. அது இந்த மாமேதையோட படம். சில வருடங்கள் தாமதமா அது திரைக்கு வருது.
சோ சாரும் அதுல ஆக்ட் பண்ணியிருக்கார். அன்னிக்கு நைட்ஷோ, நான் சோ சார் எல்லாம் மௌண்ட் ரோடுல ஒரு தியேட்டர்ல பாத்துட்டு வந்தோம்.
துக்ளக் ஆசிரியர் சோ எதிர்பார்ப்பு
பாத்துட்டு வந்ததும் சோ சார் என்கிட்ட சொன்னாரு. ''மகேந்திரன், நீங்க ரொம்ப வெறிபிடிச்சவரு. எஸ்பின்னா பாலச்சந்தர்னா அப்படி பைத்தியம் நீங்க. அதுக்காக கன்னாபின்னான்னு படத்தை ரொம்ப தூக்கி எழுதிடாதீங்க.''
''சார் படம் ரொம்ப நல்லாருக்கு சார்.''
''குறைகளையும் எழுதணும்.''
''சார் குறைகளே இல்ல சார்.''
''கண்டுபிடிங்க'' அப்படின்னாரு.
எனக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாப் போச்சு. உண்மையை சொல்லவா? உண்மையை இல்லையென்று சொல்லவான்னு பாதாள பைரவி டையலாக். அப்படியொரு குழப்பத்துல மாட்டிகிட்டேன். ஆனா உண்மையா ஒரு டிராப்ட் பண்ணேன். நடு இரவில். என்னால எவ்வளவு பாராட்டமுடியுமோ அவ்வளவு உண்மையத்தான் பாராட்ட முடியும். உண்மைக்குப் புறம்பாவும் இல்ல. அது ப்ரூப் எல்லாம் கரெக்ஷன் பண்ணி கேரி வந்தது. சோ சார் படிச்சிப் பாத்தாரு.
''என்ன சார் குறையே எழுதலேயே சார்.''
''சார் படத்தில இல்ல சார்.''
''அது இல்லாம எப்படி சார் இருக்கும். எந்தப் படத்திலேயும் குறை இருக்கும் சார்.''
''சார் என்ன பண்ணணும்றீங்க.''
''ஏதாச்சும் குறை கண்டுபிடிங்க...''
''சார் இப்போ என்ன பண்றது.. சார் இல்லாத குறைய எழுதி நான் யாரைப் பெரிய தெய்வமா நினைக்கறேனோ - தெய்வங்கற வார்த்தையை மிகையா நினைக்காதீங்க...''
நான் அப்படி நினைக்கறேன். இன்னைக்கு வரைக்கும் நினைக்கறேன். நாளைக்கு போகணும். ரிப்ளை வாங்கணும். அப்படியும் ரொம்ப கஷ்டப்பட்டு இல்லாத மூனு குறைகளை இருக்கற மாதிரி ஜோடிச்சி கொண்டுபோயி.. நேரா அவரு வீட்ல போயி இறங்கினேன். அவரையே பார்த்துகிட்டிருந்தேன். அவரையெல்லாம் நான் பார்ப்பேன்னு நினைக்கலை லைஃப்ல. எவ்வளவு பெரிய மேதை. எல்லாரும் லஷ்மி கடாட்சம் கொடுக்கணும்பாங்க. லஷ்மி கடாட்சத்தை மட்டும் அவருக்கு கொடுக்கல. அந்த வீணையும் அவருக்கோ கொடுத்துட்டா நீயே வச்சிக்கோ. அதனாலதான் அவருடைய கையெழுத்துகூட இன்னிக்கு வரைக்கும் வீணை வடிவத்திலேயே இருக்கு. இன்னிக்கு வரைக்கும் உலகப் புகழ்பெற்ற வீணை வித்வான். மேதை. அவரை அப்படியே மெய்மறந்து பார்த்துகிட்டிருக்கேன். ஹி ஜஸ்ட் ரீடிங் தி கேரி மை ரிவிவ்யூ. சட்டுன்னு அவரு முகம் மாறிச்சி.
''என்னது மூனு குறைகள்னு எழுதியிருக்கே...''
நெக்ஸ்ட் மூவ்மெண்ட். எழுந்திருச்சேன். காலைத் தொட்டு கும்பிட்டேன்.
''சார் நீங்க என்னுடைய குரு. என்னுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாக்கணும். இந்த மாதிரி எழுத வச்சிட்டாங்க. குறையே இல்ல சத்தியமா குறை இல்லை. அதுவும் உங்களை எப்படியோ நினைச்சிகிட்டிருக்கேன். சின்ன வயசில இருந்து. சார் இந்தாங்க பேப்பரை கொடுத்துட்டேன். நீங்களே என்ன கரெக்ஷன் பண்ணமோ பண்ணிக்கோங்க.'' அப்படின்னு சொல்லிட்டேன்.
''இதெல்லாம் படத்துல இல்லை. அது எப்படி வந்தது குறை.''
அது இல்லன்னு எனக்குத தெரியும் சார். நானா கற்பனைப் பண்ணி ஏதோ ஒன்னை குறையா சொன்னேன்.''
அப்புறம் அவரையே மாத்த சொல்லி வந்துட்டேன். பட் அதோட அவரோட காண்டக்ட்ஸ் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கறேன். நான் எதையுமே அடுத்தநாள் பிளான் பண்றத்து இல்லை. அடுத்த வாரம் பிளான் பண்றத்து இல்லை. என் வாழ்க்கை சினிமாவுல.. அடுத்து என்ன பண்ணபோறோம்னு தெரியாது. ஆனா அதே மேதையை வேற வகையில சந்திப்பேன்னு நெனைக்கல. உதிரிப்பூக்கள், எனது செகண்ட் பிலிம் முள்ளும்மலரும்.
மீண்டும் ஒரு சந்திப்பு
உதிரிப்பூக்கள் புரொடியூசர் சொன்னாரு. ''உங்களைப் பாக்கணும்னு வீணை பாலச்சந்தர் சார் ஆசைப்படறாரு.'' அப்படியே எழுஞ்சிட்டேன். ''சார் என்ன பாக்கணுமா? என்ன சொல்றீங்க... கையோட கூட்டுட்டு வந்துடுங்க.'' அப்பகூட என்ன நினைச்சேன். படத்தப் பாராட்டலாம். இத அப்படி பண்ணியிருக்கலாம். அதே சமயம் நீங்க இதைஇதை இப்படி செஞ்சிருக்கலாம். இதை மாத்தியிருக்கலாம். அந்த சாங் தேவையில்லைன்னு நெனைக்கறேன். இந்தமாதிரி அட்வைஸ் பண்றமாதிரி அவர் கருத்தை சொல்வாருன்னு ஒரு நடுக்கத்தோட தான் போறேன். ஆனா நடந்ததே வேற. என்னப் பாக்கணும்னு வீடு வாசல் வரைக்கும் ஓடிவந்துட்டாரு.
எப்படி இதெல்லாம் என் வாழ்க்கையில நடந்ததுன்னு புரியல. அதுக்கு நான் டிசர்விங் பர்சனா எனக்குத் தெரியல. இன்னிவரைக்கும் தெரியாது. உள்ள அழைச்சிட்டுபோனார். என்ன சொன்னார்னா.. மகேந்திரன் இதை நைன் டைம் பாத்துட்டேன். சோ ஃபார்ன்னாரு. நான் அப்பவும் பிரமிச்சிபோயி அவரைப் பார்த்துகிட்டிருக்கேன். அவர் சொல்றது என் காதுல விழல. படத்தைப் பத்திதான் பேசறார். எந்தக் குறையும் சொல்லலை படத்தைப் பத்தி. மாயஉலகத்துல இருக்கறதுபோல ஒரு உணர்வு. அன்னிக்கு பாத்து சாந்தாம்மா வீட்ல இல்ல. சன் யாருமே வீட்ல இல்லை. சார்தான் ஃப்ரீயா இருந்தாங்க. அவரே காப்பி எடுத்துட்டு வந்தாங்க. புல்லரிப்பா இருந்தது. அப்புறம் ராஜம் அவருடைய பெயிண்டிங்ஸ்லாம் கொண்டுபோய் காண்பிச்சாங்க. முடிஞ்சது.
உதிரிப்பூக்கள் வெள்ளி விழாவில் எஸ்.பி.
தென் உதிரிப்பூக்கள் இருபத்தைந்தாவது வாரவிழா. நான் புரொடியூசர்கிட்ட சார்தான் சீப் கெஸ்டா வரணும் தலைமைதாங்கணும் அப்படின்னு சொன்னேன். கரெக்டா வந்துட்டாங்க. அன்னிக்கு அவங்க பேசின விதம். பாராட்டினவிதம். இதுவரைக்கும் அப்படியொரு பாராட்டை நான் கேட்டதே இல்ல. அப்பேர்ப்பட்ட வார்த்தைகள். மிகமிக உயர்வான வார்த்தைகள். அவர் வீணை வாசிச்சா எப்படியிருக்குமோ அந்த ஒரு ஆனந்தம். அப்படியொரு பரவசமான அனுபவம். இன்னிக்கு வரைக்கும் நான் எப்பவாவது சோர்ந்துபோயிருந்தா பாலச்சந்தர் எனக்கு கேடயம் கொடுத்த ஃபோட்டோ இருக்கு. அதை ஒரு நிமிஷம் பார்ப்பேன்.
டேய் உன்ன பத்திதான் பேசறாரு. உன்னைப் பத்தி நீ ஏன் அன்டர்எஸ்டிமேட் பண்ற. அவர் நேர்ல பேசறமாதிரி இருக்கும். இட்ஸ் ட்ரூ. நான் அப்பப்ப உற்சாகத்தை வரவழைச்சுக்குவேன். ஸ்டில் இப்பவும் சொல்றேன். சரஸ்வதி கையிலேருந்து வீணையை எப்பவுமே பறிக்கமுடியாது. என்னுடைய ஃபேவரைட் இயக்குநர் மணிரத்னம். மிஷ்கின் வந்திருக்கார். ஓன் ஸ்டைல் ஆப் பிலிம் மேக்கிங். கார்த்திக் சுப்புராஜ் வந்திருக்கார். குழந்தை மாதிரி முகத்தை வச்சிருக்கார். மெச்சூர்டா 2 படம் கொடுத்திருக்கார். பார்த்திபன், மாத்தி யோசி மாத்தி யோசின்னு.. அவருடைய குரல்மாதிரியே இயக்கம் செயல் எல்லாமே இருக்கு. கடைசில கதை வசனம் இயக்கம்னு ஒரு படம் எடுத்தாரு.. கொஞ்சம் பயமுறுத்திட்டாரு எல்லாரையும். இன்னிக்கு பாலச்சந்தர் மாதிரி இருந்தார்னா எஸ்பி சார் உங்களையெல்லாம் பாத்து எப்படி பாராட்டியிருப்பார்னு நெனைச்சுப் பார்க்கறேன்.
அதே சமயம் ஒரு வேண்டுகோள்.. சார் மோகன்ராம் எஸ்.பி.சார் பத்தி புட்டேஜ் காண்பிச்சிங்க. எஸ்.பி.சார் பத்தி இது ரொம்ப ஒரே ஒரு சின்னத் துளிதான். அவர் தமிழ்சினிமாவுல எவ்வளவு புதுமைகள் பண்ணியிருக்காரு. இன்னிக்கு அவரை சொல்லலாம். இவரை சொல்லலாம். யார்யாரையோ சொல்லலாம். முன்னோடி மூத்த பீஷ்மர் தமிழ் சினிமாவுல 50 ஆண்டுகளுக்கு முன்னால் புதுமைகளைப் புகுத்தியவர் அந்த மனிதர். அதுக்கப்புறம்தான் மத்தவங்க எல்லாம். வேற யாரும் கிடையாது. இருக்காங்க. அவங்கவங்க திறமைக்கு ஏத்தமாதிரி இருக்காங்க. ஆனா அந்த மனிதர் எந்த விளம்பரத்தையும் எதிர்பார்க்காம, எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காம அவர் பாட்டுக்கும் தன்னிச்சையா பண்ணிகிட்டே இருப்பாரு. பார்த்தின் சொன்னமாதிரி அவருகிட்ட ரெண்டு விதமான மனிதர்கள் இருப்பாங்க அதான் ஆச்சரியம்.
ஓர் அற்புதமான டாக்குமெண்டரி தேவை
சோ அடுத்தடுத்த வருஷத்துல இந்த நிகழ்ச்சிய பெரிய அளவு கொண்டாடவேண்டிய கட்டாயத்துல இருக்கோம். அடுத்த தலைமுறைக்கு இவரைப் பத்தி சரியா தெரியல. அதுக்காக இந்த மாமேதைப் பத்தி மணி சார் ஒரு அற்புதமான டாக்குமெண்டரி எடுக்கப்படணும். இதுமட்டுமே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இந்த தலைமுறைக்கு மட்டுமில்ல. இன்னும் பல தலைமுறைக்கும் அவர் பெயர் நிலைச்சி நிக்கும். வாழ்க்கைங்கறது மரணத்தோட முடியறது இல்லை.
சரித்திரம் என்னிக்கு வரைக்கும் உன்னோட பேர் இருக்கறவரைக்கும் அதுவரைக்கும் உன்னோட வாழ்க்கை இருக்கும்னு சொல்வோம். அதுக்கு ஒரு அவரைப்பத்தி ஒரு அற்புதமான டாக்குமெண்டரி எடுக்கப்படணும். அதுக்காக நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்யறேன். நாங்க எல்லாரும் ஒத்துழைப்போம். இந்த டாக்குமெண்டரி உருவாக்கப்படவேண்டும். அடுத்த வருஷம் இதே நாள் அந்த டாக்குமெண்டரி திரையிடப்பட வேண்டும் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள். இந்த அற்புதமான தருணத்துல நான் வந்தது என்னுடைய கடவுள் பாக்கியம். எல்லாருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றியும்."
இவ்வாறு இயக்குநர் மகேந்திரன் பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
8 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago