சென்னை: "வலிமை திரைப்படத்தின் தாய்ப் பாசம் பற்றிய பாடல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படம் அவரது பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது" என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ’வலிமை’ குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் அஜித்தின் படம் என்பதால் ரசிகர்கள் அதனை ஆரவாரமாக வரவேற்றுவருகின்றனர். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், அஜித்தின் ’வலிமை’ தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
பூங்குன்றன் தனது பதிவில், "காலை நண்பர்களோடு நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடைய நண்பர்களில் ஒருவர் திரையரங்கில் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உடனே நான் எதுவும் டிக்கெட் முன்பதிவு செய்து தர வேண்டுமா? என்று கேட்டேன். ஆமாம் அண்ணா, நாளை அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளிவருகிறதல்லவா! என்று உற்சாகத்துடன் சொன்னார்.
வலிமை திரைப்படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ஆம் தேதி வெளியிடப்படுவது குறித்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். வலிமை திரைப்படத்தின் தாய்ப் பாசம் பற்றிய பாடல், அவரின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படம் பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது. இது குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித், அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
» ஏழாம் வகுப்பு இடைநிறுத்தம் முதல் நடிப்பு பல்கலை. வரை - மலையாள சினிமாவின் 'மனோரமா' லலிதா!
» மீண்டும் விளம்பரப் பணிகளுக்கு தயாராகும் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா? அவரின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமியான நாளை படம் வெளிவருவது ஆச்சரியம் தானே! அஜித் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா? என்பதற்கு படம் வந்த பிறகே விடை கிடைக்கும்.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் எங்களின் திருநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago