20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘ஃபைவ் ஸ்டார்’ ஜோடி

By செய்திப்பிரிவு

‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமான பிரசன்னா - கனிகா ஜோடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.

சுசி கணேசன் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் ‘5 ஸ்டார்’. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருந்த இப்படத்தில் பிரசன்னா, கனிகா உள்ளிட்டோர் அறிமுகமானார்கள். ஐந்து நண்பர்களை சுற்றி நடக்கும் கதையை பின்னணியாகக் கொண்ட இப்படம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் பரசுராம் இருவரும் இசையமைத்திருந்தனர்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரசன்னா, கனிகா ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. அல்லு அர்ஜுனின் அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய சீரிஸில் பிரசன்னா நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கனிகா நடிக்கிறார். விக்னேஷ் விஜயகுமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்.

இதனை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “2002ஆம் ஆண்டு சுசி கணேசனின் ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் என்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய முதல் திரை ஜோடியான பிரசன்னாவுடன் மீண்டும் இணைகிறேன். இது ஒரு முழு சுழற்சி போல இருக்கிறது. உன்னோடு பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் பிரசன்னா” என்று கனிகா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்