பைக்கை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்வார் அஜித் - ‘வலிமை’ வில்லன் கார்த்திகேயா

By செய்திப்பிரிவு

“ஸ்டன்ட் காட்சிகளில் பயன்படுத்தப்படும் பைக்குகள் பாதுகாப்பானவையாக இருக்கிறதா என்பதை அவரே பரிசோதிப்பார். என்னுடைய பைக்கை கூட சரி செய்தார். பைக்கை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்வார்” என்று நடிகர் அஜித் குறித்து நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ‘வலிமை’ அனுபவம் குறித்து பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது:

“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ‘வலிமை’ இன்னொரு கேட் & மவுஸ் வகை ஆக்‌ஷன் திரைப்படம் தான். ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள விதம் மிகவும் புதியது. ஹீரோவும் வில்லனும் சண்டைப் போட்டுக் கொள்ளும் விஷயம் தற்காலத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு சமூக பிரச்சினையை ஒத்திருக்கும். வினோத்தின் ‘தீரன்: அதிகாரம் ஒன்று” படத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவரோடு பணிபுரிய நான் காத்திருந்தேன். ‘வலிமை’ படத்துக்கான வாய்ப்பு வந்ததும் அதை நான் உடனடியாக ஏற்றுக் கொண்டேன். என்னுடைய நடிப்பு அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.

பைக் சேஸிங் காட்சிகளில் என்னால் அஜித் சாருடைய வேகத்துக்கு இணையாக ஓட்டமுடியாது என்பதால் என்னுடைய வேகத்துக்கு ஏற்ப அஜித் தன்னுடைய பைக் வேகத்தை குறைத்துக் கொண்டார். பைக் சத்தத்தை வைத்தே அதில் என்ன பிரச்சினை என்பதை சொல்லிவிடுவார். ஸ்டன்ட் காட்சிகளில் பயன்படுத்தப்படும் பைக்குகள் பாதுகாப்பானவையாக இருக்கிறதா என்பதை அவரே பரிசோதிப்பார். என்னுடைய பைக்கை கூட சரி செய்தார். பைக்கை ஒரு குழந்தையைப் போல கவனித்துகொள்வார்” என்று கார்த்திகேயா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்