கமலின் வாக்களிப்பு சர்ச்சை: ராஜேஷ் லக்கானி பதில்

By மகராசன் மோகன்

இந்த தேர்தலில் நான் முடிந்தால் வாக்களிப்பேன் என்று தெரிவித்த கமலுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதிலளித்திருக்கிறார்.

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் "மே 16-ல் நான் இங்கு இல்லை. என்னுடைய வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். இதற்கு முன்பு எனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்போது நான் கெஞ்சிக் கேட்டு, "இல்லீங்க... நான் இன்னும் இந்திய பிரஜை தான் என்று சொன்னேன்". பாவம்...தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் தான். நானும் முடிந்தால் இங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வேன்" என்று தெரிவித்தார் கமல்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் தோன்றி, ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று கூறிய கமல், “இந்தமுறை வாக்களிப்பது சந்தேகம்தான்” என்று கூறியிருப்பதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் கமல், முதலில் அதுபோல் தான் நடந்து காட்ட வேண்டாமா என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வெளியிட்டுள்ள பதிவில் ‘கமலுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது’ என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

“சமுதாயத்தில் ஒரு ரோல் மாடலாக திகழும் நீங்கள் தயவுசெய்து வாக்களிக்க வேண்டும்” என்றும் அந்தப் பதிவில் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டு இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

மேலும்