'பீஸ்ட்' பட முதல் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடல் வெளியானது; 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வை

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் "ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி" எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத்துடன் இந்தப் பாடலை பின்னணி பாடகி ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளார்.

சுமார் 4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள அரபிக் குத்துப் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பிருந்தே விஜய் ரசிகர்களின் இணையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட 40 நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையைக் கடந்தது அரபிக் குத்து பாடல் வீடியோ.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் எப்போது துவங்கும் என்று விஜய் ரசிகர்கள் பெரும் ஏக்கத்துடன் இருந்தார்கள்.

அதன்படி, கடந்த 7ம் தேதி 'அரபிக் குத்து’ என்ற பாடல் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டது. வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரும் இணைந்து பாடல் உருவாக்கம் குறித்து காமெடியாக பேசி வீடியோ வடிவில் பாடல் வெளியீட்டின் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பை பெற்றிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்