ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு ‘அகிலன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தொடர்ந்து ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கும் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விவேக், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘அகிலன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி மரைன் இன்ஜினியராக நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago