விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்துக்கு மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் 'எஃப்.ஐ.ஆர்'. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நாளை (பிப்ரவரி 11) வெளியாகும் இந்தப் படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தி விஷ்ணு விஷால் ‘இர்ஃபான் அஹமது’ என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீவிரவாதம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசுவதாக இப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களும் இதை உறுதி செய்தன.
இந்நிலையில் தற்போது இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ட்வீர் ஒன்றை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால் மலேசியா, குவைத், கத்தார் மக்கள் மன்னிக்குமாறு பதிவிட்டுள்ளார்.
» ‘சிவகார்த்திகேயன் 20’ படப்பிடிப்பு தொடக்கம்
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வடிவேலு - பிரபுதேவா கூட்டணி
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago