‘சிவகார்த்திகேயன் 20’ படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

அனுதீப் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படபிடிப்பு இன்று தொடங்கியது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இது தவிர ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் தெலுங்கி உருவாகவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப். 10) காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இப்படம் தவிர்த்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்துக்கான பணிகளும் தொடங்கவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்