இதுதான் நான் 22: என் டைமிங் இன்னும் பெட்டராச்சு!

By பிரபுதேவா

அன்றைக்கு ரிகர்சல் ஹால்ல இருந்த டான்ஸர்ஸ் எல்லாருமே என்னை சின்ன வயசுலேர்ந்தே பார்த்தவங்கதான். நான்தான் அப்போ ரிகர்சல் ஆரம்பிக்கப் போறேன்னு தெரிஞ்சதும் ‘‘ஓ.. தாராளமா, வெரிகுட்… பிரபு… கலக்கு கலக்கு’’ன்னு சொல்லிட்டு ரிகர்சலுக்குத் தயாரானாங்க. டான்ஸ் ரிகர்சல் நடக்கிற இடத்துல அப்பா இருந்தார்னா, ‘பக்கத்துல இருக்காரே’ன்னு டென்ஷனா இருக்கும். அதுவே அவர் இல்லைன்னா.. ‘கைடு பண்ண அப்பா இல்லையே’ன்னு பயம் இருக்கும். ஒரு சின்ன பயத்தோடயே ரிகர்சலை ஆரம்பிச்சேன்.

டான்ஸர்ஸ் எல்லாரும் நான் ஆடுறதப் பார்த்துட்டு, ‘‘இது என்ன புதுசா இருக்கு. ஏய்… பிரபு, இன்னொரு வாட்டி ஆடு’’ன் னாங்க. ஆடிக் காமிச்சேன். ‘‘திருப்பி இன்னொரு வாட்டி ஆடு’’ன்னாங்க. நாம ஏதோ தப்பு பண்றோம்னு திரும்ப ஆடிக் காட்டினேன். ஆனா, அவங்க என்னோட ஸ்டைல் ரொம்ப பிடிச்சிப் போய்தான் திரும்பத் திரும்ப ஆடச் சொன்னாங்கன்னு அப்புறம்தான் புரிஞ்சுது. ‘‘உனக்கு இது எப்படி தோணுச்சு?’’ன்னு கேட்டாங்க. ‘‘தெரி யல… ஏதோ ஆடுறேன்’’னு சொன்னேன்.

அப்புறம் ஷூட்டிங்லயும் ஆடிக் காட்டினேன். டைரக்டர், கேமராமேன், ஹீரோ, ஹீரோயின், அங்க இருந்த சக தொழிலாளிங்க எல்லாரும் என்னை முறைச்சி பார்த்தாங்க.. ஆடி முடிச் சுட்டு நான் போய் அப்பா மடியில உட்கார்ந் துப்பேன். திரும்ப ஆடிக் காட்ட சொன் னாங்க. அப்போ எனக்கு இருந்த டென் ஷன்ல அவங்க ஆச்சர்யமா பார்த்ததைத் தான் முறைச்சுப் பார்த்ததா நெனைச்சுக் கிட்டேன். என்ன… அப்போ எனக்கு பதினாலு, பதினைஞ்சு வயசு இருக்கும். எல்லாரும் அப்பாகிட்ட, ‘‘பையன் நல்லா ஆடுறான் மாஸ்டர்’’ன்னு சொன்னாங்க. இனிமேல் சினிமாதான் உலகம்னு ஆனதும் ஷூட்டிங் ரெகுலராச்சு. நான் அசிஸ்டென்டா போக ஆரம்பிச்சப்போ பல பெரிய டைரக்டர்ஸ்கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தெலுங்குப் படங்கள் நிறைய வொர்க் பண்ண ஆரம்பிச்சோம்.

பாய்ஸ் மட்டும் ஆடுற பாட்டுன்னா, நான் ஜாலியா ரிகர்சலுக்குப் போவேன். பாய்ஸ், கேர்ள்ஸ் பாட்டுன்னா கொஞ் சம் ஜாலி, கொஞ்சம் வெட்கமா இருக்கும். அதுலேயும் வெறும் கேர்ள்ஸ் பாட் டுன்னா ரொம்பவும் வெட்கமா இருக்கும். கார்லேர்ந்து தலையை குனிஞ்சிக்கிட்டே ரிகர்சல் ஹாலுக்குள்ள போயிடுவேன். அரை மணி நேரம் எப்படி ஆரம்பிக் கிறதுனு தெரியாமலேயே நின்னுட்டிருப் பேன். ‘‘என்ன பிரபு ஆரம்பிக்க லாமா?’’ன்னு கேர்ள்ஸே கேட்பாங்க. நானும் ஆரம்பிப்பேன். ரிகர்சல் பண் றப்போ… யாரையும் பேர் சொல்லிக்கூட கூப்பிட மாட்டேன். ‘‘நடுவுல நிக்கிறாங் களே அவங்க’’, ‘‘அந்தப் பக்கம் ரைட்ல இருக்கிறாங்களே’’, ‘‘அதோ… அந்த ப்ளூ கலர் டிரெஸ் போட்டிருக்காங்களே.....’’ இப்படித்தான் அடையாளம் வைத்துக் கூப்பிடுவேன். அவ்வளவு மரியாதை எல்லோர் மேலயும்.

அப்பாவுக்கு அசிஸ்டென்டா நான் ஷூட்டிங் போனப்ப, அங்கே பிரேமா அக்கான்னு ஒரு அசிஸ்டென்ட் இருந்தாங்க. அவங்க சீனியர். ஏழு மணிக்கு ஷூட்டிங்னா, அப்பா ஆறு, ஆறரைக்கு ஸ்பாட்ல இருப்பார். பிரேமா அக்காவோ அதுக்கும் முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பாங்க. அப்படி ஒரு சின்சியாரிட்டி. லன்ச் டைம்ல எல்லாரும் பிரேக் சொன்னதும் சாப்பிட போய்டுவாங்க. பிரேமா அக்கா மட்டும், அப்பா ‘‘சாப்பிட்டு வா பிரேமா!’’ன்னு சொல்ற வரைக்கும் அவருக்குப் பின்னாடியே நிப்பாங்க. அப்படியே சாப்பிட போனாலும்… அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள திரும்பவும் ஷார்ப்பா வந்து அவர் பின்னாடி நின்னுப்பாங்க. அவங்களோட உழைப்பு எனக்கெல்லாம் பயங்கர ஆச்சர்யம். ஷூட்டிங்ல ஹீரோ, ஹீரோயின் கூட, ‘‘பிரேமா அக்கா… பிரேமா அக்கா’’ன்னு உயிரை விடுவாங்க. எல்லாருக்குமே அவங்கள ரொம்பப் பிடிக்கும். இப்போ ரொம்ப வருஷமாச்சு அவங்களை நான் பார்த்து.

வீட்டுல காலையில டிபன்னா... இட்லி செய்வாங்க, இல்லைன்னா தோசை. மத்தியானம் சாதத்தோட சாம்பார் வைப் பாங்க. ஸ்வீட்னா தீபாவளி, பொங்கல்ல தான். முதன்முதலா நான் ஷூட்டிங் போனப்ப முதல்ல ‘‘இட்லி சாப்பிடுறீங் களா?’’ன்னு கேட்டாங்க. அடுத்து, ‘‘பொங்கல் வேணுமா?’’ன்னு கேட்டாங்க. சரி… ஷூட்டிங்ல ரெண்டு ‘டிஷ்’ இருக் கும்னு நெனெச்சேன். அப்பறம்.. ‘‘பூரி சாப்பிடுறீங்களா?’’ன்னு கேட்டாங்க.. நம்மல கலாட்டாத்தான் பண்ணுறாங் களோன்னு தோணுச்சு. அடுத்து, ‘‘தோசை?’’ன்னு பரிமாறுறவர் கேட்டார். இதுல தினமும் ஏதாவது ஒரு ஸ்வீட் வேற. ஷூட்டிங் ஸ்பாட்ல இவ்வளவு எல்லாம் கொடுப்பாங்களான்னு என்னால அன்றைக்கு நம்பவே முடியலை. அதேபோல, மத்தியானம் சாம்பார், காரக் குழம்பு, ரசம், தயிர், அப்பளம்னு வெரைட்டியா சாப்பாடு வரும். பெருசா ஓட்டலுக்குப் போய் சாப்பிடாத அந்த வயசுல, இது மாதிரி சாப்பாட்டைப் பார்த்ததும் எனக்கு ஜாலியா இருந்துச்சு.

நான் நிறைய வாழைப்பழம் சாப்பிடு வேன். ஒரே தடவையில பதினைஞ்சு, இருவது பழம் சாப்பிடுவேன். இப்பவும் நான் ஆந்திராவுக்கு ஷூட்டிங் போனா.. ‘‘சார் வாழைப் பழம் வேணுமா?’’ன்னு கேட்பாங்க. அந்த வயசுல சாப்பிடுறதெல் லாம் எங்கப் போகுதுன்னே தெரியாது. டான்ஸ்தான் அதுக்குக் காரணம். நடந்தா டான்ஸ்… உட்கார்ந்தா டான்ஸ்.. நின்னா டான்ஸுன்னு இருப்பேன். ‘யானை பலம்’ன்னு சொல்வோமே, எனக்கு டான்ஸ் ஆடும்போது அப்படித்தான் இருக்கும். பாட்டு ஷூட்டிங் எடுக்குற நேரம்போக மத்த நேரத்துல அங்க என்ன சத்தம் வந்தாலும் அதுக்கேத்த டைமிங்ல என் பாடி மூவ் ஆகும். கார்பன்டருங்க ‘செட்’ போடறதுக்கு ஆணி அடிக்கும்போது வர்ற ‘டக்.. டக்’ சத்தத்துக்கு என் கால் மூவ் ஆகும். பெருக்கி சுத்தப்படுத்துற சத்தம் கேட்டாகூட அதுக்கும் என் பாடி டைமிங்ல மூவ் ஆகும். அங்க நடக்குற எல்லா விஷயத்துக்கும் என் கை, கால், பாடி, பிரைன் எல்லாம் டைமிங்ல மூவ் ஆகும். இதெல் லாமே எனக்குத் தெரிஞ்சி பண் றேனா? தெரியாம பண்றேனான்னு எனக்குத் தெரியலை. இதனாலயே டான்ஸ்ல என் டைமிங் இன்னும் பெட்டராச்சு.

எல்லா டான்ஸ் மாஸ்டர்கிட்டயும் நல்லா ஆடுற, கடினமா உழைக்கிற டான்ஸர்ஸ்தான் அசிஸ்டென்டா இருக்க முடியும். அந்த பதினாலு, பதினஞ்சு வயசுல இருவது, இருபத் தஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸோட ஓடிட்டிருந்த அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருக்கணும்னா.. ரொம்ப கஷ்டம். மற்ற டான்ஸர்களோட கம்பேர் பண்ணும் போது என்கிட்ட அவ்வளவு உழைப்பு இருந்ததான்னு எனக்குத் தெரியலை. இருந்தாலும் அப்பா என்னை ஏத்துக்கிட்டார்.

அப்பா கூடவே ஷூட்டிங் போய், ஒரு கட்டத்துல முழு ரிகர்சல் பார்க்கிற பொறுப்பும் என்கிட்ட வந்தப்போ எனக்குத் தோணுனதை எல்லாம் நான் ஆடுவேன். அது நல்லா இருக்கா? நல்லா இல்லையான்னுகூட எனக்குத் தெரியாது. நம்ம பண்ணினதைப் பார்த்தா அப்பா திட்டுவாரா? ஓ.கே சொல்லுவாரா’’ன்னு பயமா இருக்கும். சில தடவைத் திட்டுவார். சில தடவை ஒண்ணும் சொல்ல மாட்டார். அப்படி எல்லாத்தையும் கடந்து ஷூட்டிங் போனா? ரிகர்சல்ல நான் கம்போஸ் பண்ணின ஸ்டெப்ல 70 சதவீதம் இருக்காது?

அது ஏன்னு அடுத்த வாரம் சொல்றேனே…

- இன்னும் சொல்வேன்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்