‘பீம்பாய்’ புகழ் ப்ரவீன் குமார் காலமானார்

By செய்திப்பிரிவு

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமலுடன் நடித்த ப்ரவீன் குமார் காலமானார். அவருக்கு வயது 74.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், நாகேஷ், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. 1990-ல் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் இந்தப் படத்துக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இந்தப் படத்தில் கமலுக்கு உதவியாளராக ‘பீம்பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ப்ரவீன் குமார். இவரை வைத்து வரும் காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே மிகவும் பிரபலம். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். மத்திய அரசின் அர்ஜுனா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய உயரத்திற்காக பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தது. ‘மகாபாரதம்’ தொடரில் பீமனாக நடித்து மிகவும் பிரபலமானவர் ப்ரவீன் குமார் என்பது நினைவுகூரத்தக்கது.

திரையுலகில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் ப்ரவீன் குமார். பின்பு பாஜக கட்சிக்கு தாவினார். கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு 9:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு, அவருடைய உயிர் பிரிந்ததாக அவரது மகள் நிகுநிகா தெரிவித்துள்ளார். ப்ரவீன் குமார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்