சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் நடிகர் வடிவேலு மீண்டும் காமெடியனாக களம் இறங்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான வடிவேலு கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பிரச்சாரத்தில் விஜயகாந்தை கடுமையாக தாக்கிப் பேசினார். அந்தத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வடிவேலு திரைப்படங் களில் நடிப்பது குறைந்தது. ஆளுங் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால்தான் தொடர்ந்து தயாரிப் பாளர்கள் வடிவேலுவை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை என்ற பரவலான பேச்சு எழுந்தது. வடிவேலுவும் வழக்கமான காமெடி வேடங்களைத் தவிர்த்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களையே விரும்பினார். இதனால் சில படங்களில் காமெடி வாய்ப்புகளைத் தவிர்த்தார். தன்னிடம் வரும் இயக்குநர்களிடம், “அண்ணே படத்துல 60 காட்சிங் கன்னா நமக்கு 15லிருந்து 20 சீனாவது இருக்க வேண்டாமா?’’ என்று கூறிவந்தார்.
இடைப்பட்ட காலத்தில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பட பாணியில் ‘தெனாலி ராமன்’, ‘எலி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் மீண்டும் இடைவெளி விழுந்தது.இதற்கிடையே, நடிகர் சங்கத் தேர்தல் வேலைகளில் பாண்டவர் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்ததோடு, தனக்கே உரிய பாணியில் பேசி பாண்டவர் அணியின் வெற்றிக்கு துணை நின்றார். தொடர்ந்து நடிகர் சங்கத்தின் பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளிலும் தலை காட்டினார். இதனால் அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான நட்பு பலப்பட்டது.
இந்த நட்பின் காரணமாக சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் வடிவேலு மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க வுள்ளது. ‘கத்தி சண்டை’ படத்தில் நடிப்பது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, ‘‘ஆமாண்ணே… பங்காளி சுராஜ் இயக்குற புதுப்படத்துலதான் நடிக்கப்போறேன். இப்போ அதுக்கான கதை விவாதம்தான் நடக்குது. ஒரே பரபரப்பா இருக்கோம்ணே. மத்ததையெல்லாம் படப்பிடிப்பு ஆரம்பிச்சதும் பேசுவோம்ணே” என்றார்.
இயக்குநர் சுராஜ் கூறும்போது, “வடிவேலு அண்ணன் தனக்கு முழு ஸ்கோப் இருக்குற கதையா தேடிக்கிட்டு இருந்தார். பல இயக்குநர்களிடம் கதை கேட்டார். முடிவா, நான் சொன்ன லைன் அவருக்கு பிடிச்சதும், ‘இதத்தான் பங்காளி எதிர்பார்த்தேன்’னு சொன்னார். ‘தலைநகரம்’, ‘மருதமலை’ படத்துக்கு பிறகு என் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் இது. இதில் அவர் பல கெட்டப்களில் வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகளை சென்னை, மும்பை, ஹைதராபாத்தில் எடுக்கப்போகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago