சிவகார்த்திகேயன் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘டான்’ படத்துக்குப் பிறகு அனுதீப் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்கள் தவிர ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தினை சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் ராஜ்குமார் பெரியசாமி. இதன் மூலம் அவருக்கு சாய் பல்லவியின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவரது கதையைக் கேட்டவுடனே தேதிகள் ஒதுக்கி, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்