விஜய் வசந்த், ராஜபாண்டி இணைப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'என்னமோ நடக்குது' படக்குழு, மீண்டும் 'சிகண்டி' என்ற படத்தின் மூலம் இணைய இருக்கிறார்கள்.
விஜய் வசந்த், பிரபு, ரகுமான், சுகன்யா உள்ளிட்ட பலர் நடிக்க ராஜபாண்டி இயக்கிய படம் 'என்னமோ நடக்குது'. பிரேம்ஜி இசையமைக்க ட்ரிபிள் வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படக்குழு மீண்டும் இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். இப்படத்திற்கு 'சிகண்டி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இரண்டு நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் விஜய் வசந்த் முன்னணி நாயகர் ஒருவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர் – நடிகைகள் பலரும் நடிக்க இருக்கிறார்கள்.
'சிகண்டி' குறித்து இயக்குநர் ராஜபாண்டி “என்னமோ நடக்குது” படத்தை போலவே இதுவும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஆக்ஷன் படம்.நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க “ சிகண்டி” தயாராகிறது.
சமூக நோக்குடன் அமைக்கப்பட்ட இக்கதையில் இன்றைய காலகட்டத்தில் தெரிந்தே நான் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை தோலுரித்துக்காட்டும் படமாக இருக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago