புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் நேரில் ஆறுதல்

By செய்திப்பிரிவு

நடிகர் அல்லு அர்ஜுன் மறைந்த புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். தென்னிந்திய பிரபலங்கள் பலரும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று (பிப். 04) பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்