நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்துக்கு வெற்றிமாறன் கதை எழுதுகிறார்.
‘மவுனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். இந்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றன. இப்படத்துக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதி பகவன்’ என்ற படத்தை இயக்கினார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு அமீர் எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். ‘யோகி’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவரது ‘ராஜன்’ கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் - அமீர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள ஒரு புதிய படத்துக்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார்.
» உருவாகிறதா '96' பாகம் 2? - இயக்குநர் பிரேம்குமார் மறுப்பு
» வலிமை முதல் ஆர்ஆர்ஆர் வரை... வரிசைகட்டும் படங்களால் திரையரங்கு உரிமையாளர்கள் உற்சாகம்
விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிவிக்கவுள்ளதாகவும் அமீர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago