நடிகர் சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது.
திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த வாரத்தில் என்னுடன் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால் உடனடியாக அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago