‘மாயா’ இயக்குநருக்கு திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

‘மாயா’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கு திருமணம் நடைபெற்றது.

நயன்தாரா நடித்த ‘மாயா’ (2015), டாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ (2019) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’. பொருளாதார நெருக்கடியால் இந்தப் படம் இப்போது வரை வெளியாகவே இல்லை. தற்போது வரை பலரும் அஸ்வின் சரவணனிடம் எப்போது 'இறவாக்காலம்' வெளியாகும் என்று கேட்டு வருகிறார்கள். தற்போது நயன்தாரா நடிப்பில் ‘கனெக்ட்’ என்ற படத்தை அஸ்வின் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அஸ்வின் சரவணனுக்கு தனது நீண்ட நாள் தோழியான காவ்யா ராம்குமாருடன் நேற்று (ஜன 30) திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியில் நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் அவர் “பேனா மற்றும் பேப்பருடன் தொடங்கிய இந்த உறவு, கவிதையில் முடிந்திருக்கிறது. ஒவ்வொறு முறையும் என்னோடு சேர்ந்து புயலை கடக்கும் உனக்கு நன்றி. குறிப்பாக மூன்றாம் அலையின் போது உன்னோடு இப்படி செய்வதே ஒரு சாகசம் போலிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் பலரும் அஸ்வின் சரவணனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்