தனது பொறுமையே தனது வெற்றிக்கு சாதகமாகிவிட்டதாக பிக் பாஸ் வெற்றியாளர் ராஜு கூறியுள்ளார்.
விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஜன 15 அன்று நிறைவடைந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வெற்றி குறித்து 'தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ராஜு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சில் ஒரு அங்கமாக இருந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘பிக் பாஸ்’ போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெற்றி பெறுவது என்பது பார்வையாளர்க்கு நம்மை பிடித்தால் மட்டுமே சாத்தியம். இப்போது என்னுடைய பொறுமை என்பது ஒரு மிகப்பெரிய பண்பு என்று நான் நினைத்ததே இல்லை. நான் ஏன் அமைதியாகவே இருக்கிறேன் என்று அடிக்கடி பலர் கேட்பதுண்டு. ஆனா நாட்கள் செல்ல செல்ல அதுவே எனது வெற்றிக்கு சாதகமாகி விட்டது. அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வதே எனக்கு உதவியது.
» வெளியீட்டுக்குத் தயாராகும் 'ராதே ஷ்யாம்' - இயக்குநர் அறிவிப்பு
» மாஸ் மசாலா விரும்பிகளுக்கு செம ட்ரீட் - 'எதற்கும் துணிந்தவன்' குறித்து பாண்டிராஜ் வெளிப்படை
ஒரு வீட்டில் நாம் எப்படிப்பட்ட மனிதராக இருக்கப் போகிறோம் என்பதை நம்மை சுற்றி இருப்பவர்களே தீர்மானிக்கிறார்கள். இதில் மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. குறிப்பாக இமான் அண்ணாச்சி எனக்கு பெரிய ஆதரவாகவும், உத்வேகமாகவும் இருந்தார்.
இவ்வாறு ராஜு கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago