மாஸ் மசாலா விரும்பிகளுக்கு செம ட்ரீட் - 'எதற்கும் துணிந்தவன்' குறித்து பாண்டிராஜ் வெளிப்படை

By செய்திப்பிரிவு

மாஸ் மசாலா விரும்பிகளை 'எதற்கும் துணிந்தவன்' முழுமையாக திருப்திபடுத்தும் என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாகப் படக்குழு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் பாண்டிராஜ் ‘எதற்கும் துணிந்தவன்’ குறித்து பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் கூறும்போது, மாஸ் மசாலா விரும்பிகளை இப்படம் முழுமையாக திருப்திபடுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும், சூர்யாவுக்கு படத்தில் ஹீரோயிசம் சற்று தூக்கலாக இருக்கும் என்றும் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்