‘நாய் சேகர்’ வெற்றி: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

By செய்திப்பிரிவு

‘நாய் சேகர்’ படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நாய் சேகர்'. இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையின் போது திரையரங்குகளில் வெளியானது.

கரோனா அச்சுறுத்தலால் வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இந்த ஆண்டு வெளியாகாததால் ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்லப் போகிறாய்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் பலவும் தியேட்டர்களில் வெளியாகின. இதில் வெளியான மற்ற படங்களைக் காட்டிலும் ‘நாய் சேகர்’ படம் ஓரளவு கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் ‘நாய் சேகர்’ படம் வெற்றிப் படமாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான சக்ஸர் மீட் ஒன்றையும் படக்குழு நடத்தியுள்ளது. இதில் சதீஷ், பவித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். மேலும் அப்பதிவில் கடவுளும், ரசிகர்களும் இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதாக சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்