விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கொலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
'கோடியில் ஒருவன்' படத்துக்குப் பிறகு 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', ‘கொலை’ ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் சில படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் கடந்த அக்டோபர் மாதம் ‘கொலை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பாலாஜி குமார் இயக்கி வரும் இப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ஃப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இப்படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
» முதல் பார்வை - முதல் நீ முடிவும் நீ | நினைவுகளைக் கிளறும் நாஸ்டால்ஜியா பயணம்
» பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆயினர்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜன 21) நிறைவடைந்தது. இறுதிகட்டப் பணிகளை விரைந்து முடித்து வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago