ஒமைக்ரானிலிருந்து மீண்டது எப்படி?- விஷ்ணு விஷால் பகிர்வு 

By செய்திப்பிரிவு

நடிகர் விஷ்ணு விஷால் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தான் தொற்றிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒருவழியாக கரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டேன். எனக்கு ஏற்பட்டது ஒமைக்ரான் தொற்று ஜீன் பரிசோதனை செய்து கொண்டேன்). ஆனால் அது லேசானதாக இருக்கவில்லை. இந்த பத்து நாட்களும் மிகக் கடினமாக இருந்தது. இப்போதும் கடும் சோர்வாக உணர்கிறேன். விரைவில் இதிலிருந்து மீள்வேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. அனைவரிடம் பணி தொடர்பான நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்.

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்