‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தில் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்ந்தது. ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அதிக முறை ட்வீட் செய்யப்பட்ட படமாகும் ‘மாஸ்டர்’ அறிவிக்கப்பட்டது. விஜய், விஜய் சேதுபதி ஆகிய இருவரையுமே புதிய நடிப்பு, உடல்மொழி ஆகியவற்றில் முற்றிலும் புதிய கோணத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், இன்றுடன் (ஜன.13) ‘மாஸ்டர்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "‘மாஸ்டர்’ வெளியாகி ஓராண்டு நிறைவு. மிக்க நன்றி விஜய் அண்ணா மற்றும் விஜய் சேதுபதி அண்ணா! மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று லோகேஷ் கூறியுள்ளார்.
One year of #Master
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago