சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்துக்கு ‘நூறு கோடி வானவில்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சசி. தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘நூறு கோடி வானவில்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜனவரி 14 பொங்கல் பண்டிகை அன்று படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது.
இப்படம் தவிர்த்து சண்முகம் முத்துசுவாமி இயக்கும் ஒரு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இதில் நாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இயக்குநர் அமீர், கருணாஸ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
» நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கரோனா தொற்று உறுதி
» உலகத்தை பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும்- விஜய் ஆண்டனி விரக்தி ட்வீட்
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago