நடிகை த்ரிஷாவுக்கு கரோனா தொற்று 

By செய்திப்பிரிவு

நடிகை த்ரிஷாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதால், மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து அறிகுறிகளும் எனக்கு ஏற்பட்டன. அது எனக்கு மிகவும் அழுத்தம் மிகுந்த வாரமாக இருந்தாலும் தடுப்பூசிகள் காரணமாக இன்று நான் குணமடைந்து வருகிறேன். என்னுடைய பரிசோதனைகளை முடித்து மீண்டும் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய மிகச்சிறந்த குடும்பத்துக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு த்ரிஷா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்